Passer au titre

Tamoul: கல்வி மற்றும் தொழில் குறித்த தகவல்கள்

நீங்கள் வெளிநாட்டு ஆண் அல்லது பெண்ணாக சுவிசில் தமிழை தாய் அல்லது விளங்கிக்கொள்ளும் மொழியாகக் கொண்டுள்ளீர்களா? இங்கு நீங்கள் உங்களது தொழில் அல்லது தொடர்ந்து கற்கும் உயர்கல்வின் முக்கிய நிலைகள் குறித்த பல்வேறு தகவல்களைக் காணலாம்.

தகவல் பிரசுரம் மற்றும் இணையத் தொடர்புகள்

இங்கு நீங்கள் தொழிற்கல்வி அல்லது பாடசாலை உயர்கல்வி குறித்த முக்கிய கேள்விகளுக்காக, பல எண்ணிக்கையான தகவல் பிரசுரங்களைக் காணலாம்.உங்களுக்குத் தேவையான தகவல் பிரசுரங்களைப் பிரதி ஏடுப்பதுடன், அவற்றை நீங்கள் வசிக்கும் மாநிலத்திலுள்ள தொழில், உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தைத் திட்டமிடும் ஆலோசனை நிலையத்தில் ஆலோசனைக் கலந்துரையாடலுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் இந்தப் பக்கத்தில் காணும் ஒவ்வொரு தகவல் பிரசுரத்திற்கும், ஒரு இலக்கம் உள்ளது. இடதுபக்க மேனுவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த இலக்கம் அனைத்து மொழிகளுக்கும் சமமானது. உதாரணமாக நீங்கள் டொச் தொடா்பை அமுத்தினால், அதே தகவல்பிரசுரங்கள் உள்ள ஒரு பட்டியலைக் காண்பீர்கள், ஆனால் அது டொச்சில் இருக்கும்.

கட்டாய பாடசாலை

சுவிசில் மாநீலங்கள் கட்டாய பாடசாலை குறித்துத் தீர்மானித்துக் கொள்கின்றன. இதற்குத் தகுந்தவாறு பல்வேறு வித்தியாசமான முறைகள் உள்ளன. சுவிஸ் மாநில அதிபர்களின் கூட்டமைப்பு (CDIP) இது குறித்து டோச், பிரெஞ்சு, இத்தாலியம், றொமானிஸ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது: www.cdip.ch.

Structures scolaires cantonales en Suisse et dans la Principauté du Liechtenstein [PDF, 7.14 MB]

ஒவ்வோரு பிரதேசத்திலும் உள்ள இணையத்தளமான site Internet des départements cantonaux de l'instruction publique இல் மாநிலப் பாடசாலை ஒழுங்குமுறைகள் குறித்த விபரங்களைக் காணலாம்.

சுவிசின் கல்வித்திட்டம்

தொழிலுக்கான அடிப்படைக்கல்வி (தொழிற்கல்வி)

வெறுமையாக உள்ள தொழிற்கல்வி இடங்களின் பட்டியல் (தொழிற்கல்வி இடங்கள் குறித்த ஆதாரம்)

orientation.ch/apprentissage

பாடசாலை உயர்கல்விகள்

Autres thèmes

பிரெஞ்சில் தகவல்கள்

orientation.ch தொழில்கள் குறித்த தரவு உள்ளடக்கங்களையும், தொழில் மற்றும் உயர்கல்வி குறித்த பல எண்ணிக்கையான மேலதிக தகவல்களையும் டொச், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் வழங்குகின்றது. பிரெஞ்சில் ஒருசில முக்கிய தொடர்புகளாக

  • தொழில்கள் குறித்த விபரமான தகவல்கள்: Rechercher une profession
  • ஒரு தொழிற்கல்வி ஊடாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது: Apprentissage
  • சுவிசில் ஒரு கல்லுரியில் உயர்கல்வி பேறுவது: Hautes écoles
  • மாநில மொழியைக் கற்றல்: Cours de langue


orientation.ch